Friday 3rd of May 2024 08:25:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
டோனியின் கனவைத் தகர்த்த ஷிகர் தவான்: 5விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!

டோனியின் கனவைத் தகர்த்த ஷிகர் தவான்: 5விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!


சவாலான இலக்கை நிர்ணயித்து ஆட்டத்தை தொடர்ந்த டோனியின் கனவை தகர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம்.

ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் 34 வது லீக் ஆட்டம் சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆட்டத்தின் 3வது பந்தை ஆறு ஓட்டங்களாக மாற்றும் வகையில் சாம் கர்ரன் தூக்கி அடித்த பந்தை எல்லைக்கோட்டருகில் வைத்து அற்புதமான பிடியெடுப்பின் மூலம் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அடுத்துவந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர்.

வாட்சன் 36 ஓட்டங்களில் வெளியேறினார். டு பிளசிஸ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 58 ஓட்டங்களில் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய அணியின் தலைவர் டோனி 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்துவந்த ஜடேஜா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டார்.

இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் குவித்தது. அம்பதி ராயுடு 45 ஓட்டங்களுடனும், அதிரடியாக ஆடிய ஜடேஜா 13 பந்தில் நான்கு ஆறு ஓட்டங்கள் உள்பட 33 ஓட்டங்களுடனும், ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி சார்பில் நார்ட்ஜீ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பிரித்வி ஷா முதல் ஓவரில் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார். ரகானே 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் பொறுப்புடன் ஆடினார். ஷ்ரேயஸ் அய்யரும் தவானும் சேர்ந்து 68 ஓட்டங்கள் சேர்த்தனர். அய்யர் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இறங்கிய ஸ்டோய்னிஸ் 24 ஓட்டங்களிலும், அலெக்ஸ் கேரி 4 ஓட்டங்களிலும் வெளியேறினர். அதிரடியாக ஆடிய தவான் சதமடித்தார்.

இறுதியில் டெல்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 101 ஓட்டங்களுடனும், அக்சர் படேல் 21 ஓட்டங்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டோனி தலைமையிலான சென்னை அணியின் வெற்றி கனவை தவிடு பொடியாக்கிய தவான் 58 பந்துகளை எதிர்கொண்டு ஒரு 6 ஓட்டம், பதின்நான்கு 4 ஓட்டங்கள் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்று சதமடித்திருந்து போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம், தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE